பிரபல தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில், அவரது மகள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி கல்பனா வசிக்கும் குடியிருப்பில் இருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சுயநினைவின்றி அவர் இருந்திருக்கிறார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவர்கள் கூறுகையில், கல்பனா தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாகவும், தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கல்பனாவின் மகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் அம்மா மன அழுத்தத்தில் இருந்தார். மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையை சாப்பிட்ட நிலையில், மாத்திரையின் வீரியம் காரணமாக இப்படி நடந்துள்ளது.
அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. அவர் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.