ஆதி, லட்சுமிமேனன் லைலா, சிம்ரன் எம் எஸ் பாஸ்கர் இன்னும் பல நட்சத்திரங்களில் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
மூணாறில் உள்ள ஒரு கல்லூரியில் அடுத்தடுத்து சில பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அது அமானுஷ்மா அல்லது தற்கொலை தானா என்று கண்டுபிடிப்பதற்காக Ghost investigater ஆக வரும் ஆதி அங்கு துப்பு துலக்குகிறார். அப்பொழுதுதான் அவருக்கு சில உண்மைகள் புலப்படுகிறது. அந்த உண்மையினால் இந்த கல்லூரிக்கு என்ன சம்பவங்கள் நிகழ்கிறது மீண்டும் தற்கொலைகள் நடந்தனவா இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்கரு.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆதி தமிழில் நடித்திருக்கும் படம். வழக்கம்போல் அவர் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். சிம்ரன் எம் எஸ் பாஸ்கர் லைலா என அனைவரும் தங்களின் நடிப்பின் மூலம் புது உச்சத்தை தொட்டிருக்கிறார்கள் என்று கூறலாம்.
இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் கேட்கும் ராகம் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
கதைக்களம் மூணாறில் நடக்கிறது. அதனால் கதைக்கு ஏற்ற விஷுவல் கொடுத்திருக்கிறார்கள் படத்தில்.
படத்தின் இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை கையாண்டிருக்கிறார். கதையும் நல்ல வலு உள்ளதாகவே உள்ளன. ஆனாலும் முதல் பாதி மிகவும் மெதுவாகவே செல்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக இரண்டாம் பாதி மிக வேகமாக செல்கிறது.
சப்தம் தான் உலகில் அனைத்தையும் ஆள்கின்றன என்ற ஒரு கூற்றை முன்மாதிரியாக வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ற காட்சிகளும் ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளன.
ஆக மொத்தத்தில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சப்தம் ஒரு நல்ல படம்