அகத்தியா திரைவிமர்சனம்

ஆக்சன் கிங் அர்ஜுன், ஜீவா,ராசி கண்ணா, யோகி பாபு நடித்து பாடலாசிரியர் பா விஜய் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

ஆர்ட் டைரக்டராக வேலை பார்க்கும் ஜீவா, தான் முதன்முதலாக வேலை செய்யும் படத்திற்காக தன் கைகாசையும் போட்டு புதிதாக பாண்டிச்சேரியில் ஒரு செட் அமைக்கிறார். ஆனால் படம் டிராப் ஆகிவிடுகிறது. இதனால் நொந்து போன ஜீவா என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் போது, ராசி கண்ணாவின் ஐடியாவினால் அந்த செட்டு போட்ட அரங்கத்தை கோஸ்ட் மியூசியம் என்று மாற்றுகிறார். ஆனால் அந்த கோஸ்ட் மியூசியத்தைசுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணி ஒருவர் திடீர்னு மாயமாகி விடுகிறார். அவரை தேடிப் பார்க்கும்போது சில அமானுஷ்யங்கள் அந்த செட்டில் நடக்கின்றன. அது என்ன ஏது? அது ஏன் ஜீவாவின் வாழ்க்கையில் சம்பந்தப்படுகிறது என்பதை வைத்து சொல்லி இருக்கும் படம் தான் அகத்தியா.

ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா என அனைவரும் நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ராதாரவி நடிப்பு மிகவும் அருமை.

படத்தின் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நன்றாக இருப்பதோடு, என் இனிய பொன் நிலாவே பாடலை ரீமிக்ஸ் பண்ணியிருக்கும் விதம் அருமை.

படத்தின் ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்பங்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன படத்திற்கு மேலும் வலுப்படுத்துகின்றன.

பாடலாசிரியர் பா விஜய் இதற்கு முன்னாலும் படம் எடுத்து இருக்கிறார் ஆனால் இந்த படத்தை ஒரு வித்தியாசமாக சித்த மருத்துவம் பற்றியும், சித்தர்கள் பற்றியும் கூறி இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

என்னதான் படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் முதல் பாதி மிகவும் ஸ்லோவாக இருக்கிறது. இரண்டாம் பகுதி வேகம் எடுத்தாலும் தெரிந்த கதையாகவே இருப்பதால் படம் சில இடங்களில் மிகவும் சலிப்பை தட்டுகிறது.

ஆக மொத்தத்தில் அகத்தியா படம் ஒரு வித்தியாசமான கதைக் களம் கொண்ட படம்.