சத்யராஜ், ஜெய், யோகி பாபு, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்தராஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
ஜெய் ஃபேமிலியும், யோகி பாபு ஃபேமிலியும் அவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை ஏர்போர்ட்டில் காத்திருக்கிறார்கள். அப்போது அவர்களின் உறவுக்காரர்களான ஆணும் பெண்ணும் இவர்களின் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு ஒரு கடைக்கு செல்லும் போது, காதல் மோகத்தில் குழந்தையை கைமாற்றி விடுகிறார்கள்.
விமான பயணத்தின் போது தான் தெரிகிறது குழந்தை கை மாறிய விஷயம், பிறகு இவர்கள் இருவரையும் சந்தித்து குழந்தை கைமாற்றிக் கொள்ளும் இடத்திற்குள், ஜெய்யின் வீட்டிற்குள்ளும் சரி, யோகி பாபுவின் வீட்டிற்குள்ளும் சரி பல பிரச்சினைகள் ஓடுகின்றன. இந்த பிரச்சனைகள் எல்லாம் எப்படி சரி செய்யப்படுகின்றன திரும்பவும் அவர்களின் குழந்தைகள் எப்படி கைமாற்றப்படுகின்றன என்பதுதான் படத்தின் கதை.
கதை சொல்லும் விதத்தை போல் திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.
வசனங்களை இன்னும் ஆழப்படுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு காட்சிகள் இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.
படத்தில் ஜெய் கடமைக்கு என்று நடித்தது போல் உள்ளது. யோகி பாபு ஓரளவு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். சத்யராஜ் நடிப்பும் சுமாராகவே உள்ளது. மற்ற நடிகர்களின் நடிப்பும் கொஞ்சம் குறையாகவே பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் Baby & Baby படம் ஒரு தடவை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.