பால சரவணன், மீனாட்சி கோவிந்தராஜன், ஜகவீர் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் மீனாட்சி, ஜகவீர் இருவருமே இன்ஸ்டாகிராம் பிரபலங்கள். ப்ரீ வெட்டிங் ஷூட் கம்பெனியும் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுக்குள் காதல் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். இது அவர்களின் வாழ்க்கையில் சில பல குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. இறுதி வரையில் இவர்கள் நண்பர்களாக இருந்தார்களா இல்லையா என்பதை இன்றைய காலத்துக்கு கட்டத்திற்கு ஏற்றது போல் சொல்லி இருக்கிறார் சுசீந்திரன்.
படத்தின் பெயர் என்னவோ 2k லவ் ஸ்டோரி. ஆனால் கதை என்னவோ பிரியாத வரவேண்டும் படத்தின் கதை. இன்னும் சொல்லப்போனால் பூவெல்லாம் உன் வாசம் படத்தின் ஒரு கதை கரு. சுசீந்திரன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் அதை கொஞ்சம் தெளிவாக கொடுத்திருந்திருக்கலாம்.
காட்சிகள் மிக அழகா இருந்தாலும் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு இந்த படத்திற்கு மிக அருமையாகவும் எதார்த்தமாகவும் இருந்தது. கோயம்புத்தூரை இதற்கு முன்னால் எந்த படத்திலும் இவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் காட்டியதில்லை.
அதேபோல் படத்தின் இசை மற்றும் பாடல்கள் நடன வடிவமைப்பு அனைத்தும் ரசிக்கும் விதம்.
படத்தின் கதாநாயகன் ராகவிர்க்கும் மீனாட்சியும் பார்ப்பதற்கு நண்பர்களாக தெரியவில்லை அண்ணன் தம்பி போல் தெரிகிறார்கள்.
வினோதினி வைத்தியநாதனின் நடிப்பு மற்றும் ஜேபி யின் நடிப்பு ஓரளவுக்கு ரசிக்கும் விதமாக உள்ளது.
ஆக மொத்தத்தில் 2கே லவ் ஸ்டோரி கொஞ்சம் சுமார் ஸ்டோரி.