ஒத்த ஓட்டு முத்தையா திரை விமர்சனம்

கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.

கதைப்படி கவுண்டமணி ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கிறார். அவருக்கு மூன்று தங்கைகள். அவர்கள் மூவருக்கும் ஒரே வீட்டில் தான் மாப்பிள்ளை பார்த்து மணமுடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் அவர்கள் வேறு வேறு ஆண்களை காதலிக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அவரிடம் டிரைவராக வேலை பார்த்த யோகி பாபு அவர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியில் நிற்கிறார். இது பிடிக்காத கவுண்டமணி இறுதியில் எப்படி யோகி பாபுவை ஜெயித்தாரா இல்லையா? அவரது தங்கைகளுக்கும் திருமணம் முடித்து வைத்தாரா இல்லையா என்பதை பற்றி பேசும் படம் தான் இந்த ஒத்த ஓட்டு முத்தையா!

நீண்ட நாட்களுக்குப் பிறகு கவுண்டமணியின் கவுண்டரில் திரையரங்கம் அதிரும் என்று எதிர்பார்த்தால், மிகவும் அமைதியாகவே இருக்கிறது. அவரின் வழித்தோன்றலான யோகிபாபுவின் காமெடியாக நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் சுமார் ரகம் தான். மொட்டை ராஜேந்திரன் ரவி மரியா என்று பல நட்சத்திரங்கள் இருந்தாலும் படத்தில் காமெடி சுத்தமாக இல்லை என்பது தான் உண்மை.

திரைக்கதையில் அழுத்தம் இல்லை. மிகவும் தொய்வாகவே நகர்கிறது. எப்பொழுதுமே கவுண்டமணி காட்சிகளில் வசனம் அனல் பறக்கும். ஆனால் இந்த படத்தில் அதுவும் சொதப்பல்.

படத்தில் 49ஒ படத்தைப் போல் அரசியல் நையாண்டித்தனமாவது நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றமே.

ஒளிப்பதிவு மிக மிக சுமார் ரகம்.

இந்தப் படத்தின் இயக்குனரான சாய் ராஜகோபால் ஒரு தடவைக்கு இரண்டு தடவை கவுண்டமணியை வைத்து படம் எடுக்கலாமா என்று கொஞ்சம் யோசித்து இருந்திருக்கலாம். காரணம் அவரது முதுமை. தள்ளாடிய வயதில் ஒரு பெரிய மனிதரை கொண்டு வந்து நடிக்க வைக்கிறேன் என்ற பெயரில் அவரை சிறுமைப்படுத்தியது தான் வேதனை.

ஆக மொத்தத்தில் ஒத்த ஓட்டும் முத்தையா கொஞ்சம் வேஸ்ட் ஐயா.