தெலுங்கு திரை உலகை முன்னணி நடிகரான நாக சைதன்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தண்டேல். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை கார்த்திகையா 2 படத்தை இயக்கிய சந்து மொண்டேட்டி தான் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த தண்டேல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.