கடலில் நடக்கும் சாகசம்: GV பிரகாஷின் கிங்ஸ்டன்

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷின் 25வது படம் கிங்ஸ்டன். ஜீவி பிரகாசுக்கு சொந்தமான பேரல் யுனிவர்சிட்டி மற்றும் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார்.

கடலில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் சாகச படமாக கிங்ஸ்டன் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மார்ச் மாதம் 7 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ராசா ராசா என்ற பாடல் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்று பட குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.