இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கு ‘சக்தித் திருமகன்’ என படக்குழு பெயரிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி 2012 முதல் கதாநாயகனாக அவர் நடித்து வருகிறார். ‘நான்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’, ‘கோடியில் ஒருவன்’ உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் கடந்த வருடம் ‘ஹிட்லர்’ படம் வெளியானது.
இந்த நிலையில் அவர் தனது 25-வது பட வேலையை ஆரம்பித்தார். இந்தப் படத்தை அருண் பிரபு இயக்குகிறார். விஜய் ஆண்டனி, இசையமைத்து நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் வரும் கோடைகால விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தற்போது பகிர்ந்துள்ள டைட்டில் போஸ்டரில் தெரிவித்துள்ளது.
https://x.com/vijayantony/status/1884474107657662893?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1884474107657662893%7Ctwgr%5E650aa9941c312bec62f27b80ae3ff7a9827979ed%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
‘புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா; இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா’ என கேப்ஷன் இதில் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இந்தப் படம் ஆக்ஷன் ஜானர் கதைகளத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.