தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அபிநயா. வாய் பேச முடியாத காது கேட்காத தனது திறமையை மட்டுமே நம்பி இந்த சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்தவர் தான் அபிநயா.
நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாகவும் விஜய் வசந்தத்திற்கு ஜோடியாகவும் அந்த படத்தில் நடித்திருப்பார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பழமொழிகளில் நடித்து வருகிறார்.
நடிகைகளில் பல மொழிகள் தெரிந்த ஒரு மிகச்சிறந்த நடிகை அபிநயா என்றும் கூறி வருகின்றனர். நாடோடிகள் படத்தை தொடர்ந்து தனி ஒருவன் ,வீரம், ஏழாம் அறிவு, ஈசன் ,ஆயிரத்தில் ஒருவன் ,தாக்க தாக்க , மார்க் ஆண்டனி போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பணி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். ஜோஜூ ஜார்ஜ் இயக்கிய இந்த படத்தில் ஒரு காட்சியில் மிகவும் ஆபாசமாக நடித்திருப்பதாக இவர் மீது பல சர்ச்சைகள் எழுந்தன.
அதற்கு தன்னுடைய சைகை மொழியின் மூலமே பதில் கூறினார் அபிநயா. நான் எப்படி நடிக்க வேண்டும் எந்த காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது இயக்குனர் எடுத்த முடிவு. ஜோஜூ ஜார்ஜ் மிகச்சிறந்த இயக்குனர். பல திறமையான நடிகர்களுடன் பணியாற்றி இருக்கிறார் என அவருடைய கருத்தை தெரிவித்திருந்தார் அபிநயா. அது மட்டுமல்ல நடிகர் விஷாலுடன் அபிநயாவை இணைத்து பல செய்திகள் வெளிவந்தன.
அபிநயாவை விஷால் திருமணம் செய்யப் போகிறார் என பல பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் அதை விஷால் மறுத்து வந்தார். இந்த நிலையில் அபிநயா ஒரு பேட்டியில் தான் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறியிருக்கிறார் .சிறுவயதிலிருந்தே ஒருவருடன் பழகி வருகிறேன். இருவரும் நண்பர்களாகத்தான் பழகினோம். மிகச் சிறந்த நபர் அவர் .தன்னுடைய எண்ணத்தை மதிப்பவர்.
இப்படியே பழகி வந்த நாங்கள் ஒரு சமயத்தில் ரிலேஷன்ஷிப்பிற்குள் வந்து விட்டோம். 15 வருடங்களாக நாங்கள் இருவரும் பழகி வருகிறோம் என கூறினார். எப்போது திருமணம் எனக் கேட்டபோது அதைப்பற்றி கூடிய சீக்கிரம் தெரிவிக்கிறேன் என்றும் மிகவும் வெட்கத்துடன் கூறினார் அபிநயா. பேசவும் கேட்கவும் முடியாத போதும் படங்களில் மிகச்சிறந்த கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் அபிநயா.