UI திரை விமர்சனம்

விஷால் நடித்த சத்யம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் உபேந்திரா. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கம் ரஜினிகாந்தின் கூலி படத்திலும் நடித்து வருகிறார். இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் கன்னட மொழியில் இருந்து தமிழ் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கும் படம் தான் UI.

இந்தப் படம் முழுக்க முழுக்க அரசியல் நையாண்டி மற்றும் உளவியல் சார்ந்த விஷயங்களை பற்றி பேசுகிறது.

இயற்கையை அழித்துவிட்டு அரசியல் பேசுபவர்கள் என்னென்ன நையாண்டித்தனம் எல்லாம் செய்வார்கள் என்பதை குறியீட்டு காட்டுகிறது.

அதுமட்டுமல்லாமல் மனிதனின் மூளைக்குள் எவ்வளவு அழுக்குகள் எவ்வளவு பிரச்சனைகள் அதையெல்லாம் ஒருவன் கடந்து வருவது எப்படி என்ற இன்னொரு விஷயத்தையும் பேசுகிறது.

இப்படி உளவியல் ரீதியாக புத்திசாலிகளுக்கு மட்டும் புரியும் விதமாக இந்த படத்தை எடுத்ததால் பல பேருக்கு இந்த படம் புரியவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் கன்னட படம் என்பதால் இந்த படத்தில் ஈர்க்கும் விதமாக ஒரு விஷயமும் இல்லை என்பது இன்னொரு உண்மை.

படத்தின் பின்னணி இசை மிகப்பெரிய பலவீனம்.

படத்தின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது குறிப்பாக vfx மிக பிரம்மாண்டமாக உள்ளது. ஆர்ட் டைரக்டர் மிக உன்னிப்பாக இந்த கதைக்காக நேர்த்தியுடன் வேலை செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் இயக்குனரான உபேந்திரா இதற்கு முன்னால் ‘ஏ’ என்ற ஒரு படத்தை எடுத்தார் அந்த படத்தின் கீழே புத்திசாலிகளுக்கு மட்டும் என்ற வாசகத்தை பயன்படுத்தி இருந்தார்.

அதேபோல்தான் இந்த படம் புத்திசாலிகளுக்கு மட்டும்.