சென்னையில், விடுதலை பாகம் 2 படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த சேத்தனும், அவரது மனைவி தேவ தர்ஷினியும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அவர்களிடம் சேத்தன் மனைவி தேவ தர்ஷினி பேசும் போது, ‘படம் மிகவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. நானும், என்னுடைய மகளும் என் கணவர் அருகிலேயே உட்கார வில்லை. படத்தில் அந்தளவு மோசமானவராக அவரை காண்பித்து இருக்கிறார்கள். எத்தனையோ வில்லன் ரோல்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இதில் சேத்தன் மிகவும் கொடூரமாக நடித்து இருக்கிறார்.
படம் முடிந்த பின்னர் என்னால் பேசவே முடியவில்லை. காரணம், படத்தின் முடிவு அப்படி இருந்தது.
என் கணவர் வீட்டிற்கு வந்தால் கதவையே திறக்க மாட்டேன். ஒவ்வொருவரும் இந்த படத்தில் இருந்து ஒவ்வொரு விஷயத்தை எடுத்துச் செல்வார்கள். அது தனி நபர் சார்ந்த விஷயமாக இருக்கும். இளையராஜா சார் தெய்வம். அவரைப் பற்றி நான் என்ன சொல்ல’ என்று பேசினார்.
சேத்தன் பேசும் போது, ‘ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லா இடங்களிலும், மக்கள் ஆவலுடன் படத்தை வந்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள். முதல் பாகத்திலும் நான் நடித்து இருந்தேன். அதை விட இரண்டாம் பாகத்தில் என்னுடைய கதாபாத்திரம் இன்னும் நன்றாக வந்து இருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் வெற்றி மாறனின் எழுத்தும், டைரக்ஷனும் தான். வெற்றிமாறன் என்றுமே ஏமாற்ற மாட்டார். இதிலும் அவர் ஏமாற்றவில்லை ‘ என்று பேசினார்.