2012 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தை இயக்கியவர் சங்கர் தயாள். அரசியல் ரீதியான கதையாக பலரது கவனத்தை இந்த படம் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தை சங்கர் தயாள் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்திற்கான பிரஸ் மீட் இன்று மாலை நடக்க இருந்தது. ஆனால் இதில் பங்கேற்க வந்த சங்கர் தயாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது திரை உலகத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.