விஜய் திரிஷா விவகாரம் : வைரலாகும் ‘Justice for sangeetha’ ஹேஷ்டேக்!

விஜய்யின் மனைவி சங்கீதா, விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் தவறாமல் கலந்து கொள்வார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக விஜய் பட விழாக்களில் அவர் பங்கேற்பதில்லை. தவெக-வின் முதல் கொள்கை மாநாட்டில் கூட அவர் பங்கேற்கவில்லை. இன்னும் சிலரோ, சங்கீதா சமீப காலமாக சென்னையில் அதிகம் இருப்பதில்லை லண்டனில் தனது தந்தை பிஸ்னஸை கவனித்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.
அதற்கு த்ரிஷாவுடன் அவருக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் நட்பு தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய்யும் திரிஷாவும் கீர்த்தியின் திருமணத்திற்கு ஒன்றாக தனி விமானத்தில் சென்றது பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக இதேபோல் விஜய்யும் த்ரிஷாவும் வெளிநாட்டில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அப்போதிருந்து விஜய்யையும் த்ரிஷாவையும் இணைத்து கிசுகிசு பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர்கள் ஒன்றாக கோவா சென்ற வீடியோவும் வெளியாகி இருப்பதால் இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுகிறது.

இதனால் கொந்தளித்த நெட்டிசன்கள், சங்கீதா விஜய்க்கு நீதி கேட்டு Justice For Sangeetha எனும் ஹாஷ் டேக்கை எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.