ரங்கநாதன் ரியா முருகன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம்.
தென் சென்னையில் நடக்க கூடியதாக அமைந்துள்ளது இந்த படத்தின் கதை கரு. மனைவியின் மறைவுக்கு பிறகு பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமை
மறுப்பக்கம் பிளாக் காட் என்ற செக்யூரிட்டி நிறுவனம் இயங்கி வருகிறது. இவர் அவ்வப்போது சட்ட விரோத செயல்களையும் செய்து வருகின்றனர். இதனால் அவரது ஹோட்டல் பறிபோகிறது. திரும்பவும் அந்த ஹோட்டலை மீட்டார்களா இல்லையா என்பது தான் படத்தின் கதைக்கரு!
நாயகனாக ரங்கா. முதல் படம் என்பதால் நடிப்பில் ஒரு அனுபவமின்மை தெரிகிறது. நிறைய காட்சிகளில் ஒரே விதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற அனைவரின் நடிப்பு சுமார் ரகம்.
அறிமுக இயக்குநர் ரங்கா ஒரு வித்தியாசமான களத்தை தேர்வு செய்து கதையை கூற முயற்சி செய்துள்ளார். ஆனாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும
ஜென் மார்டினின் பின்னணி இசை இப்படத்திற்கு பெரிய பலம்
ஒளிப்பதிவாளர் சரத்குமார் இப்படத்திற்காக தனது பெரும் உழைப்பை கொடுத்துள்ளார். தண்ணீருக்கு அடியில் இடம் பெற்றிக்கும் காட்சிகளை எடுத்த விதத்திற்கு பாராட்டுகள்.
ஆக மொத்தத்தில் தென் சென்னை படம் ஒரு சுமார் ரகம்.