Once upon a time in Madras திரை விமர்சனம்

பரத், ‘விருமாண்டி’ அபிராமி, ‘தலைவாசல்’ விஜய், அஞ்சலி நாயர் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.

Anthology ஸ்டைலில் உருவாகி இருக்கும் படம், ஆனால் இது anthology படம் அல்ல.

 படத்தின் முக்கிய கதை கரு, ஒரு துப்பாக்கியால் பல பேருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான்.

 அப்போ துப்பாக்கி முக்கிய பொருளாக இருக்கும்போது அதை சார்ந்த கதை தான் இருக்க வேண்டுமே தவிர, துப்பாக்கியை ஒரு ஊடுபொருளாக வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.

 நான்கு வெவ்வேறுபட்ட கதைகள் வெவ்வேறு கதை மாந்தர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் விதம் மிக மிக நேர்த்தியாக இருந்தது.

 விருமாண்டி அபிராமி ஜொலிக்கிறார். நடிகர் பரத்துக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கதாபாத்திரம் கொடுத்திருந்திருக்கலாம். தலைவாசல் விஜய்  முற்றிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.

 படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஏனென்றால் இந்த படத்தை பல வருடங்களாக எடுத்திருப்பார்கள் என்று படத்தை பார்க்கும் போது நமக்கே தோன்றுகிறது. இடைப்பட்ட காலத்தில் வெவ்வேறு படத்தில் வரும் கதைக்களங்கள் ஒன்றாக இருந்ததால், இதன் திரைக்கதையில் காட்டப்படும் கதைகளின் சம்பவங்கள் ஏற்கனவே பார்த்த படங்களை ஞாபகப்படுத்துகிறது. அதனாலயே  இதுதான் அடுத்து நடக்கப்போகிறது என்று உணர முடிகிறது.

 மேலும் ஒரு துப்பாக்கி என்று வந்து விட்டால் போலீஸ் வருவார்கள். ஆனால் இந்தப் படத்தில் போலீஸ் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்கள்.

 படத்தின் இசை கூடுதலாக கவனத்தை செலுத்தவில்லை. வழக்கம் போலவே உள்ளது.

 கதையில் வசனத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். அதுவும் ஒரு குறைவாகவே தெரிகிறது.

 இந்த படத்தின் இயக்குனர் வித்தியாசமாக முயற்சிக்கிறேன் என்று நிறைய மெனக்கெட்டு இருக்கிறார் என்று படத்தை பார்க்கும் போது நமக்கே தோன்றும். ஆனால் அது திரைக்கதையின் அழுத்தமின்மை காரணமாக பெரிதாக பேசப்படாமல் போகும் என்று நம்பப்படுகிறது.

 ஆக மொத்தத்தில்  once upon a time in madras படம் லாஜிக் சுத்தமாக இல்லாத, ஆழமான சமூக அவலங்களை பேசக்கூடிய, ஆனால் அழுத்தம் இல்லாத திரை கதையை கொண்ட ஒரு முறை பார்க்கக்கூடிய சுமார் படம்.