சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மண்டேலா, மாவீரன் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தன்னுடைய சியான் 63 படத்தில் விக்ரம் இணையவுள்ளார். இதுகுறித்து சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே சியான் 63 படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை விக்ரம் தாறுமாறாக உயர்த்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தங்கலான் படத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற விக்ரம், தற்போது சியான் 63 படத்திற்காக 50 கோடி ரூபாய்களை சம்பளமாக பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தங்கலான் படத்தை காட்டிலும் தன்னுடைய சம்பளத்தை விக்ரம் தாறுமாறாக உயர்த்தியுள்ளார். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்த விக்ரம் அந்த படத்திற்காக அதிகமான சம்பளத்தை பெறவில்லை என்று கூறப்படுகிறது.