மிர்ச்சி சிவா, வாகை சந்திர சேகர், MS பாஸ்கர் மற்றும் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படம் அனைவராலும் பாராட்டப்பட்ட ரசிக்கப்பட்ட ஒன்று. மேலும் அந்தப் படத்தில் தான் 16 வயதினிலே படத்தில் நடித்த நடிகர்கள் போல், இந்த சூது கவ்வும் படத்திலும் நடித்த நடிகர்கள் அனைவரும் இன்று சினிமா துறையில் ஒரு முக்கியமான அந்தஸ்தில் இருக்கிறார்கள்.
அதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தில் இருந்தது.
படத்தின் ஆரம்பம் முதலில் மிகப்பெரிய சொதப்பல், பழைய கதையை புது கதையுடன் இணைக்கிறேன் என்ற பெயரில் பண்ண லாஜிக் ஓட்டைகள் சகிக்கவே முடியவில்லை.
படத்தின் முதல் பாதியில் ஏதாவது விறுவிறுப்பாக இருக்குமா என்றால் வசந்த மாளிகை சிவாஜி கணேசன் போல் மிர்ச்சிசிவா எப்பொழுது பார்த்தாலும் குடித்துக்கொண்டு மீட்டர் வைத்து செக் பண்ணி கொண்டே தான் இருக்கிறார். நண்பர்களாவது ஏதாவது திருந்தும் பட்சத்தில் இருக்கிறார்களா அதுவும் இல்லை. இப்படி கதாபாத்திரம் முழுக்க நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும் சொதப்பு சொதப்பு என்று சொதப்பியதற்கு காரணம் இந்த படத்தின் திரைக்கதை மட்டுமே.
திரைக்கதையில் நேர்த்தி இல்லாத காரணத்தினால் படத்தில் இவர்கள் செய்யும் காமெடி காமெடியாகவே ரசிக்கப்படவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
படத்தில் வரும் வசனங்களும் ஏற்றுக் கொள்ளும் படியாகவே இல்லை.
ஒரு படத்திற்கு இசை என்பது எவ்வளவு முக்கியமோ அதை துளியும் கவனிக்காமல் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர். அதிலும் சூது கவ்வும் முதல் பாகம் படத்தில் வரும் BGM பல பேரின் ரிங்டோன் ஆக இருந்தது என்பது வரலாற்று உண்மை. அதற்காகவாவது இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். சொதப்பிவிட்டார்கள்.
இந்தப் படத்தில் ஒரே ஒரு ஆறுதல், முதல் பாகத்தில் கருணாகரனின் நடிப்பு படத்திற்கு எவ்வளவு பெரிய தீனியை போட்டதோ அதேபோல் இந்தப் படத்திலும் கருணாகரனின் நடிப்பு கொஞ்சம் ரசிக்கும் படியாக உள்ளது.
இயக்குனர் இந்த கதையை எடுத்ததில் எந்த ஒரு குறையும் இல்லை, ஆனால் அதை ஒரு டார்க்யூமர் காமெடி படமாக எடுக்காமல் விட்டதுதான் தவறு.
ஆக மொத்தத்தில் சூது கவ்வும் 2 எந்த ஒரு விறுவிறுப்பும் இல்லாத சூது கவ்வும் முதல் பாகத்தை கூட நெருங்க முடியாத மிக மிக சுமாரான படம்!