கங்குவா கொடுத்த அடி!

கார்த்திக் சுப்புராஜூக்கு சூர்யா இட்ட கட்டளை?

கங்குவா நடிகர் சூர்யாவின் சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வெளியான முதல் நாளில் இருந்தே பெரும் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று வந்தது.

இதனால் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணமாக பர்க்கப்படுவது படத்திற்கு வைக்கப்பட்ட புரொமோஷன் நிகழ்ச்சிகள் தான். இதில் படம் குறித்து பல ஹைப்புகளை கொடுத்த நிலையில், ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் தியேட்டருக்கு வந்து ஏமாந்து போயினர்.

இது சூர்யாவிற்கு பெரிய அடியாகவே இருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பின், சூர்யா கதாநாயகனாக நடித்த படம் வெளியாகி உள்ள சமயத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் அடுத்தடுத்து வெளியாகும் சூர்யாவின் படத்தையும் பெரிதாக பாதிக்கும் என நம்பப்படுகிறது. இதனால், சூர்யை சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது கங்குவா திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா- இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள சூர்யா 44 திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இவர் சமீபத்தில் சூர்யா 44 படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு படம் குறித்த அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதில், சூர்யா 44 படம், கார்த்திக் சுப்புராஜ் ஒரு காதல் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதுதான் கதை எனக் கூறி படத்தின் மீதான ஹைப்பைக் கூட்டியிருந்தார்.

இந்நிலையில், கங்குவா கொடுத்த அடியால் ஆடிப் போயிருக்கும் சூர்யா, தனது அடுத்தப் படத்தில் சில தவறுகளை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம்.

இதனால், கார்த்திக் சுப்புராஜுக்கு சில கண்டீஷன்களை கூறியுள்ளார் சூர்யா. அதன்படி, படத்தின் ஹைப்பை ஏற்றும் வகையில் எந்த செய்தியும் வெளியிடக் கூடாது. படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து மட்டும் பட விழாக்களில் பேச வேண்டும். படத்தை எந்தக் காரணத்திற்காகவும் ஓவர் பில்டப்பாக பேசிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.