நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ராக்காயி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக டாப் நடிகையாக வலம் வருகின்றார். பல தடைகளை தாண்டி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் .

தற்போது வரை 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் பிற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வாடகை தாயின் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்று கொண்டார். தற்போது சினிமா, பிசினஸ், குழந்தைகள் வளர்ப்பு என அனைத்திலும் சிறந்த பெண்ணாக வலம் வருகின்றார். இன்று நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு Nayanthara: Beyond the Fairy Tale என்ற ஆவணப்படம் netflix ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கின்றது.

இந்த ஆவணப் படத்தில் நடிகை நயன்தாராவின் சினிமா தொடங்கி தனது வாழ்க்கை மற்றும் காதல், திருமணம், குழந்தைகள் என அனைத்தையுமே பதிவிட்டு இருக்கின்றார். மேலும் இன்று நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கின்றது.

இயக்குனர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்திற்கு ‘ராக்காயி’ என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. நடிகை நயன்தாரா இதுவரை இல்லாத அளவிற்கு புதிய கெட்டபில் கையில் அருவாளுடன் அனைவரையும் வெட்டி வீசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த டைட்டில் டீசர் தற்போது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் ” என்ன நயன்தாராவும் அனுஷ்காவும் இப்படி இறங்கிட்டாங்களே” என்று ரசிகர்கள் கிண்டல் அடித்தும் வருகின்றனர்.