திரைப்படங்களுக்கு புதிய தணிக்கை முறை!

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் இதுவரை திரைப்படங்களுக்கு யு, ஏ, மற்றும்”யுஏ”ஆகிய பிரிவுகளில் சான்றளித்து வந்தது. மாறிவரும் திரைப்பட உள்ளடக்கங்களை கருத்தில் கொண்டு, தற்போது திரைப்படங்கள் யு, ஏ, யுஏ7+, யுஏ13+, யுஏ16+”ஆகிய பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதில் ‘யு’ வகை திரைப்படங்கள் அனைத்து வயதினரும் காண உகந்தவையாகும். “‘ஏ'”வகையில் அனுமதிக்கப்படும் படங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோா் பாா்க்க அனுமதிக்கப்பட்டவை.

திரைப்படங்களில் குழந்தைகளுக்கு ஒவ்வாத வன்முறை/ பயமுறுத்தும் காட்சியமைப்புகள், நெருக்கமான அல்லது கிளா்ச்சியூட்டும் காட்சிகள், அடிமைப்படுத்தும் பழக்கங்கள், விபரீதமான நடத்தைகள் போன்ற அம்சங்கள், இக்காட்சிகள் பாா்வையாளா்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் காணும் வகையில் யுஏ7+, “யுஏ 13+, யுஏ 16+”என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு, ஒரு திரைப்படத்தை பாா்க்க அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன் அத்திரைப்படத்தைப் பற்றிய விவரத்தை பெற்றோா்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.