தமிழில், மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், பிச்சைக்காரன் 2 படங்களில் நடித்தவர் காவ்யா தப்பார். சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன் விளம்பர துறையில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இயக்குனர் விளம்பர படத்தின் படப்பிடிப்புக்காக அவரை ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறார் என்றும், அதன் பிறகு ” உனக்கு இது மாதிரி நான்கு விளம்பர வாய்ப்புகள் தருகிறேன். என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கொள் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்ததால் அந்த விளம்பர வாய்ப்புகளை நிராகரித்து விட்டு சினிமாவுக்கு வந்ததாக கூறியுள்ளார்”. மேலும் தான் ஒரு நடிகையாக வேண்டும் என்பது அப்பாவின் கனவு. அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி வாய்ப்பு தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். திரைத்துறையை விட விளம்பர துறையில் அட்ஜஸ்ட்மென்ட் அதிகம் என்பது என்று ஒரு சிலர் கிசுகிசுப்பு உண்மைதான் என்பது போல, இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.