கங்குவா படம் பார்த்துவிட்டு சென்சார் போர்டு சொன்ன தகவல் என்ன தெரியுமா?

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா முதல் முறையாக இணைந்துள்ள படம் கங்குவா,வரலாற்று கதையம்சம் கொண்ட ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது. தற்போது சூர்யா மற்றும் படக்குழுவினர், சூறாவளியாக சுழன்று படத்தின் புரமோஷனில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியான நிலையில், ‘கங்குவா’ திரைப்படத்தின் பாதியை பார்த்ததாக கடந்த மாதம் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், படம் லெவலில் இருப்பதாக தன்னுடைய விமர்சனத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதே போல் பாடலாசிரியர் விவேகா “கங்குவா பார்த்து மெய்சிலிட்டேன். இந்திய சினிமாவில் பெருமைமிகு பிரம்மாண்டம். இயக்குனர் சிவா நம்மை வேறு உலகுக்கு அழைத்து செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பு உச்சம் என புகழ்ந்து தள்ளி இருந்தார்”.


இதை தொடர்ந்து ‘கங்குவா’ படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இப்படத்திற்கு யு /ஏ சான்றிதழ் வழங்கியது மட்டுமின்றி, படக்குழுவினரை மனதார படக்குழுவினரை பாராட்டி உள்ளனர். 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடும் இந்தத் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டத்தின் உச்சம் எனவும், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதத்தில் இப்படம் இருப்பதாகவும் சென்சார் குழுவினர் கூறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. பொதுவாக சென்சார் குழுவினர் இந்த அளவுக்கு எந்த ஒரு படத்தையும் பாராட்டியது இல்லையாம். எனவே ‘கங்குவா’ படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது.