தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். 80 மற்றும் 90-களில் ஹீரோவாக பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவருடைய மனைவி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக சத்யராஜின் மகள் திவ்யா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில், “என்னுடைய அம்மா நான்கு வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவரை வீட்டில் வைத்து கவனித்து வருகிறோம். அவருக்கு பிஜி டியூப் மூலம் உணவளித்து வருகிறோம்.
அவருடைய உடல் நிலையை அறிந்து நாங்கள் உடைந்து போனோம். எனினும் அவர் முன்னேற்றத்திற்காக நாங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். என் அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். கடந்த நான்கு வருடங்களாக என் தந்தை ஒரு சிங்கிள் பேரண்டாக இருந்து எங்களை கவனித்து வருகிறார்.
என் அப்பாவின் அம்மாவும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அந்தவகையில் நானும் என் அப்பாவுக்கு ஒரு சிங்கிள் மதராக இருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து பவர்ஃபுல்லான சிங்கிள் பேரண்ட் கிளப்பை உருவாக்கி உள்ளோம். என் தந்தை பெரியார்” என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இது வைரலாகிய நிலையில் ரசிகர்கள் பலரும் திவ்யா சத்யராஜின் பதிவில், அவர் விரைவில் குணமடைந்து விடுவார்.. நம்பிக்கையுடன் இருங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/DCLdQAAylXv/?igsh=MXFjeDY4eXgwcWdzNg==