ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அவதார்’.
உலக அளவில் அதிகம் வசூலித்த இந்தப் படத்தின் அடுத்த பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 3-ம் பாகம், 2025-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வெளியாகும் எனப்பட குழுவினரால் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இந்தப் படத்தின் தலைப்பை, இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் நடிகர்கள் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அந்த படத்துக்கு ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்று தலைப்பு வைத்தனர்.
இந்த நிலையில், இந்தப் படத்தின் First Look போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது, ரசிகர்களுக்கு அவதார் உலகத்தின் முதல் தோற்றத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. புதிய நாவி பழங்குடியினர் மற்றும் பசுமையான, அன்னிய உலகத்திலிருந்து பிரமிப்பூட்டும் காட்சிகளைக் காட்டுகிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படம் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளதுஎன்றே நம்பலாம்.