தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பதை ஏற்கனவே படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துவிட்டது. இன்னும் சில முக்கிய பாத்திரங்களில் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.
கடந்த மாதம் 5ம் தேதி, கேரள மாநிலம் பையனூரில் படப்பிடிப்பு துவங்கியது. இதில் நடிகர் விஜய் பாடிய பாடல் காட்சி, பல நூறு நடனக்கலைஞர்களுடன் படமாக்கப்பட்டது. அதன்பிறகு விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட மாநாடு பணிகளில் தீவிரம் காட்டிய விஜய், தற்போது மீண்டும் தளபதி 69 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.
முன்பெல்லாம், தினமும் 6 மணி வரை மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதும், அதன்பிறகு வீட்டுக்குச் சென்று விடுவதும் விஜயின் வழக்கம். இரவில் ஷூட்டிங் நடிக்க மாட்டார். அதே போல் வாரந்தோறும் ஞாயிறு அவர் பிரேக் எடுத்துக் கொண்டு ஓய்வெடுப்பார். ஆனால் தளபதி 69 படப்பிடிப்பை பொருத்த வரை, 20 நாட்கள் ஷூட்டிங், 10 நாட்கள் அரசியல் பணி என திட்டமிட்டு படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
தளபதி 69 படத்தின் வியாபாரத்தை இப்போதே கேவிஎன் புரடக்சன்ஸ் துவங்கிய நிலையில், சில தினங்களுக்கு முன் துபாயை சேர்ந்த வினியோக நிறுவனத்துக்கு தளபதி 69 படத்தை ரூ. 75 கோடிக்கு ஓவர்சீஸ் உரிமத்துக்கு விற்பனை செய்த தகவல் வெளியானது. சிங்கிள் பேமென்ட் ஆக அந்த தொகையை வாங்கிக் கொண்டது. அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ரூ. 100 கோடி பைனான்ஸ் வாங்கிய தகவலும் வெளியானது.
இப்போது லேட்டஸ்ட் தகவலாக, தளபதி 69 படத்தை தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் வெளியிட, நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரும் லியோ படத்தை தயாரித்தவருமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் விலை பேசியுள்ளார். ரூ. 100 கோடிக்கு அவர் விலை பேசிய நிலையில், 99 சதவீதம் அவருக்குதான் தளபதி 69 படம் தமிழ்நாடு தியேட்டர்கள் வெளியீடு உரிமை தயாரிப்பாளர் லலித்குமாருக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.