அஜித்தின் விடாமுயற்சி எப்பொழுது தான் வெளியாகும்?

ஆரம்பத்திலிருந்தே இழுபறியாக இருந்த விடாமுயற்சி, தற்போது பல இழுபறிக்கு பிறகு ஒருவழியாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிவிற்கு வந்துள்ளது. இருப்பினும் விடாமுயற்சி எப்போது வெளியாகும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த வருடத்துக்குள், கிறிஸ்துமஸ்-க்கு வெளியாகும் என்று அர்ஜுன் சொன்னார். ஆனால் வேறு எந்த அப்டேட்-ம் இல்லை. பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என்று, அஜித் நினைக்கிறார். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகுமா இல்லை விடாமுயற்சி வெளியாகுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அஜித் தற்போது லைகா நிறுவனத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. விடாமுயற்சி படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்பதை பற்றி அஜித் லைக்காவிடம் பேசியிருப்பதாகவும், சீக்கிரம் விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.