ஜெயம் ரவி சிறு வயதிலேயே பாய்ண்ட் பிடித்து பேசுவதால் அவருடைய அப்பா வக்கிலுக்கு படிக்க வைக்கிறார். ஆனால், போற இடத்தில் எல்லாம் லா பாயிண்ட் பேச, ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி அப்பாவிற்கு நெஞ்சு வலி வர, இதுக்கு மேல் நீ வீட்டில் இருக்காதே என்று திட்டுகிறார்.
ஜெயம் ரவியின் அக்கா பூமிகா இனி நான் தம்பியை பார்த்துக்கொள்கிறேன், அவனை ஒரு நல்ல பையனாக மாற்றுகிறேன் என தன் குடும்பத்திற்கு அழைத்து செல்கிறார்.
ஆனால், அங்கே சென்றதும் ஜெயம் ரவியால் அவர்கள் குடும்பமே பிரியும் நிலை ஏற்பட பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
தம்பிக்கு எந்த ஊரு, மாப்பிள்ளை, ராசுக்குட்டி என்று தமிழ் சினிமாவில் சொல்லக்கூடிய முக்கியமான படங்களின் காட்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்து திரைக்கதையாக எழுதி வைத்திருக்கிறார் ராஜேஷ்.
ஜெயம் ரவி அவ்ளோ எதார்த்தமான நடிப்பை கொடுத்தும் படம் பெரிதாக ஜொலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பூமிகா, ப்ரியங்கா மோகன் என அனைவரிடத்திலும் செயற்கை தனமே மிஞ்சியுள்ளது. நட்ராஜ் இருந்தாலே அந்த இடத்தை தன் நடிப்பால் ஆக்ரமிப்பார் என்பார்கள், ஆனால், இதில் எதோ சப்போர்ட்டிங் ஆக்டர் போல் அவர் வந்து செல்வது மிக வருத்தம், அதிலும் குழந்தைகள் நாடகத்தை பார்த்து மனம் மாறும் இடமெல்லாம் ஏன் ராஜேஸ் இவ்ளோ பழைய மசாலாவை அரைத்து வைத்துள்ளீர்கள் என்றே கேட்க தோன்றுகின்றது.
ஒரு குடும்பத்தில் டாக்டர் வக்கீல் கலெக்டர் ஃபாரஸ்ட் ஆபிஸர் என்று நான்கு பேர் இருந்தும், ஒரு சாதாரண ஆள் திருத்துகிறானா என்பது நடக்கக் கூடிய விஷயமா பாஸ்?
கண்டிப்பாக சந்தானம் இல்லாமல் ராஜேஸ் தடுமாறுவதை நன்றாக பார்க்க முடிகிறது, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தையே மீண்டும் இந்த ஜெனரேஷன் கிட்ஸுகளுக்கு ராஜேஷ் எடுக்க முயற்சித்துள்ளார், அதில் மக்காமிஷி தவிற வேறு எதுவும் அவர்களுக்கு ஒட்டாது என்பதே உண்மை.
படத்தின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அற்புதமாக இருந்தாலும் பின்னணி இசை என்னவோ சீரியல் படங்களுக்கு வாசிக்கும் இசை போலவே இருந்தது.