ராம்கி, துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ரித்து ரித்விக் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
பேங்கில் கேஷியராக வேலை பார்த்து, மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார் பாஸ்கர் குமார். குடும்ப சூழல், கடன் நெருக்கடியால் முதல் முறையாக பாஸ்கர் நேர்மை தவறும் சூழல் உருவாகிறது.
அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் கண்ட ஏற்ற இறக்கங்கள், சவால்களை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.
பாஸ்கர் கேரக்டரில் துல்கர் சல்மான் அழகாக நடித்திருக்கிறார். அதிலும் ஒரு கட்டத்திற்கு மேல் பணம் மிகுதியாக வந்தவுடன், அவர் காட்டும் அதிகார தோரணை வெகு சிறப்பு.
அவரின் மனைவியாக வரும் மீனாட்சி சௌத்ரியும் சளைத்தவர் அல்ல. அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
படத்தின் திரைக்கதை விறுவிறு என்று நகர்வதால், நமக்கு எங்கும் தொய்வில்லாமல் படம் சென்று கொண்டே இருக்கிறது. இயக்குனருக்கு வாழ்த்துக்கள். இதற்கு முன்னால் எடுத்த வாத்தி படம் கூட, கொஞ்சம் மெதுவாகத்தான் நகரும். ஆனால் இந்த படம் எளிமையாகவும், அதேபோல் வித்தியாசமான புரிதலோடும் நகர வைக்கிறது.
இதற்கு அவர் ரெஃபரென்ஸாக எடுத்திருக்கும் ஹர்ஷத் மேத்தா வழக்கு, பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல் பர்க்கின் ” Catch Me If You Can ” என்ற ஆங்கிலப் படத்தின் திரைக்கதை வடிவமைப்பை எடுத்திருப்பது மிகவும் சிறப்பு.
இது 90களில் நடக்கும் கதை என்பதால் ஆர்ட் டைரக்டரின் வேலை மிகவும் அழகாக உள்ளது. இசையும் இந்த படத்திற்கு கூடுதல் பலம்.
ஆனால் பாடல்கள் ஜொலிக்கும்படியாக இல்லை. அதேபோல் இப்படி எல்லாம் ஒரு விஷயம் நடக்குமா என்று அடிக்கடி இந்த படத்தில் ட்விஸ்ட் காட்சிகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. அதையும் கொஞ்சம் யோசித்து தவிர்த்து இருந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் லக்கி பாஸ்கர் இந்த தீபாவளி பண்டிகைக்கு ஜாலியாக பார்க்கக்கூடிய ஒரு படம்.