கவின் மாற்றுத்திறனாளி, கண் பார்வையற்றவர் என ஒவ்வொரு நாளும் ஒரு வேஷம் போட்டு பிச்சையெடுக்கிறார்.
ஆனால் ஜேக் என்ற சிறுவன் உழைத்து வாழ வேண்டும் என, பள்ளிக்கு சென்றுகொண்டே இடையில் புத்தகம், பேனா என விற்று கவினுடன் சேர்ந்து வசிக்கிறார்.ஒருநாள் ஆதரவற்றவர்களுக்கு விருந்தளிக்கும் நாளில் பிச்சைக்காரர்களுள் ஒருவராக கவினும் ஆடம்பர மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மாளிகைக்குள் யாருக்கும் தெரியாமல் நுழையும் கவின் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.அதன் பின்னர் உயிருக்கு ஆபத்தான பிரச்சனையில் இருந்து கவின் தப்பித்தாரா இல்லையா என்பதே Bloody Beggar படத்தின் கதை.
Dark humor டைபில் படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சிவபாலன். ஆனால் படம் டார்க்காக இருக்கிறதே தவிர ஹியூமராக இல்லை..
பிச்சைக்கார வேடத்தில் நடித்த கவினை, ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதாவைப் போல் இருந்தால் அழகாக இருக்கும் என்று ஒப்பனை செய்து இருக்கிறார்கள், ஆனால் அது எம் ஆர் ராதா கதாபாத்திரத்தையே சிறுமைப்படுத்துவதாக தோன்றுகிறது.
திரைக்கதையில் பெரிய அழுத்தம் இல்லாததனால், அங்கங்கே செல்லும் சில நல்ல எமோஷனல் சீன்ஸ் கூட ஜொலிக்காமல் போய்விட்டது என்பது தான் உண்மை.
கவின் எதனால் இந்த கதையை தேர்ந்தெடுத்தார் என்று புரியவில்லை. டாடா, ஸ்டார் போன்ற நல்ல படங்களை கொடுத்துவிட்டு இப்படி ஒரு படத்தை சூஸ் பண்ணி இருக்கலாமா கவின்?
அதேபோல் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலவீனம், ஒளிப்பதிவும் ஆர்ட் வொர்க்கும் மிக அருமையாக இருந்தது.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தயாரிப்பாளரான நெல்சன் இந்த படத்திற்காக விஜய் சேதுபதி மாதிரியான ஆட்களை தேர்வு செய்யலாம் என்று இருந்தேன் ஆனால் இயக்குனரின் பிடிவாதத்தால் கவினை போட்டேன் என்று கூறினார். நல்லவேளை மற்ற நடிகர்கள் பெயரை கெடுத்துக் கொள்ளவில்லை.
ஆக மொத்தத்தில் ப்ளடி பெக்கர் தீபாவளிக்கு வெளியான படங்களில் மிக மிக குறைவான மதிப்பெண்களை பெறப்போகும் படம்.