2024 ஆம் ஆண்டுக்கான இந்த வருட தீபாவளிக்கு பெரிய ஹீரோக்களின் படங்களாக மூன்று படங்கள் வெளியாகிறது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ள சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி மற்றும் கவின் ஆகியோரின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
தொடர் விடுமுறை இந்த வருட தீபாவளி அக்டோபர் 31ஆம் நாள் அதாவது வியாழக்கிழமை வருகிறது. அதனை அடுத்து வருகிற நவம்பர் 1 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் குடும்ப ரசிகர்கள் பலர் திரையரங்குகளுக்கு வருவது நிச்சயம். எனவே இதனை இலக்காக வைத்து இந்த முன்னணி ஹீரோக்களின் திரைப்படம் வெளியாக உள்ளது.
இன்று அமரன் படத்தின் முன்பதிவு தொடங்கியது. முன் பதிவு தொடங்கிய சில சமயத்தில் பல ஊர்களிலும் டிக்கெட் விற்பனை கிட்ட தட்ட முடிந்தே விட்டன. இந்நிலையில் மற்ற படங்களை விட அமரன் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளும் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் சென்னையில் உள்ள பிரபல முன்னணி தியேட்டர்களில் டிக்கெட்டுகள் முதல் நாள் முழுவதும் உள்ள ஷோக்களில் நிரம்பி உள்ளது. முன்பதிவில் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் முன்னோக்கி செல்வது நல்ல முடிவையே தரும். ஏனெனில் அமரன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் கிளப்பியுள்ளது. இதன் காரணமாகவே அமரன் படத்திற்கு அதிகமான முன்பதிவு கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தின் கதை மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை வாழ்க்கை கதை என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடித்த வெளியாக உள்ள படம் பிரதர். இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. ஏனெனில் இயக்குனர் ராஜேஷ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கம் இப்படமாக இப்படம் உள்ளது.
இந்நிலையில் பிரதர் படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிரதர் படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே நிரம்பியுள்ளது. ஏனெனில் பிரதர் படம் மற்றும் பிளடி பெக்கர் படங்கள் கதையின் அம்சம் மற்றும் திரைக்கதையை பொறுத்தே அதற்கான ரசிகர்களின் வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க உள்ளது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் வெற்றி பெறப் போகும் படம் எது எனவும் எதிரபார்ப்பு அதிகரித்துள்ளது.