டென்ஷனான ஷாருக்கான்?

நயன்தாராவுடன் காதலா என்ற கேள்விக்கு காட்டம்!

பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.

பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சூழலில் அவரிடம் ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர், ‘ஜவான் படத்தில் நடித்தபோது நயன்தாராவிடம் ;காதலில் விழுந்தீர்களா’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷாருக், ‘ஷட் அப். நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. ஹா ஹா’ என்று ரிப்ளை கொடுத்திருக்கிறார். அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.