விஜய் நன்றாக நடனமாடுவார். சண்டை காட்சிகள் நடிப்பார். ஆனால், கூச்ச சுபாவம் உள்ளவர். படப்பிடிப்பு தளங்களில் யாரிடமும் பேசவே மாட்டார். ஜாலியாக இருக்க மாட்டார். இயக்குனர் கூப்பிட்டதும் வந்து நடிப்பார். முடிந்ததும் கேரவானுக்குள் போய்விடுவார். இதுதான் அவரின் ஸ்டைல். இப்போதும் அவர் அப்படித்தான்.
படப்பிடிப்பு முடிந்தால் நேராக வீட்டிற்கு போய்விடுவார். சினிமா துறையில் உள்ள யாரிடமும் பேசவோ, பழகவோ மாட்டார். தன்னுடைய படங்களில் நடிக்கும், சக, நடிகைகளிடம் கூட அதிகம் பேச மாட்டார். இதனாலேயே அவரை பலருக்கும் பிடிக்காது. ஆனால், ஒரு கட்டத்தில் விஜய் அப்படித்தான் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.
அதேநேரம், காதல் கதைகள், அதில் ஃபீலிங்கான வசனங்கள் என தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் விஜய். சினிமாவில் எந்த ரிஸ்க்கும் எடுக்கமாட்டார். வித்தியாசமான கதைகளிலோ, கதாபாத்திரங்களிலோ, தோற்றத்திலோ நடிக்க மாட்டார். அவர் ரசிகர்களும் அதை விரும்பவில்லை.
விஜய் வந்து ஒரு பாடலுக்கு நடனமாடினாலே நாங்கள் பார்ப்போம் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, விஜயும் அதையே தொடர்ந்து செய்து வருகிறார். தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம்தான் வாரிசு.
இந்நிலையில், நடிகை தேவயாணியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘வாரிசு படத்தில் சரத்குமார் மட்டும்தான் அழகா நடிச்சிருந்தார். விஜய் தப்பு தப்பா நடிச்சிருந்தார். அப்பாக்கிட்ட இப்படித்தான் ஆணவமா பண்ணுவியா?.. உங்க அப்பாகிட்ட அப்படி பண்ணுங்க.. அதை சினிமாவில் பண்ணி மத்த பசங்க அவங்க அப்பாகிட்ட பண்ண தூண்டும் கொடூரமான ஆள்தான் விஜய்’ என பொங்கியிருக்கிறார்.