அமெரிக்காவில் வெளியிடப்பட்ட அமரன் படத்தின் காட்சிகள்:
தென்னிந்தியாவிலேயே திரையிடப்பட்ட முதல் படம் இதுதான்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இவர்களுடன் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலுமான ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி மிகவும் வைரலானது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாடலும் வெளியான நிலையில் தற்போது இந்தப் படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அமரன் படத்தின் விளம்பரத்திற்காக நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் திரையில் அமரன் படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டன.
இந்த திரையில் திரையிடப்படும் முதல் தென்னிந்திய திரைப்படமாக அமரன் படம் உள்ளது. இது குறித்த தகவலை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.