சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “அமரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிவகார்த்திகேயன் தனது உரையிலே, தனது ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றியுணர்வுகளைப் பகிர்ந்தார். “நான் விழும்போது கைதந்து, எழும்போது கைதட்டி என்னோடவே இருப்பவர்கள் என் நண்பர்கள்,” என்று தனது உணர்வுகளை சொல்லியுள்ளார்.இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் தனது பணியினை பற்றி பேசும்போது, “இந்த படம் ராஜ்குமாரின் பயணத்தைப் பற்றியது. அவர் ஒரு நல்ல தலைவர்,” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
படத்தின் பல முக்கிய காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன என்றும், அங்கு ஏற்பட்ட சவால்களையும் பகிர்ந்தார்.நடிகை சாய் பல்லவியுடன் இணைந்து நடிப்பது சிவகார்த்திகேயனின் நீண்டநாள் கனவாக இருந்தது. “மலர் டீச்சர்” கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.அதன் பிறகே அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று சொன்னேன், இப்போது அது நடந்திருக்கிறது,” என்று சிவகார்த்திகேயன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.கமல் ஹாசனின் “ராஜ்கமல் பிலிம்ஸ்” மூலம் பல கிளாசிக் திரைப்படங்கள் வந்துள்ளன என்று கூறிய சிவகார்த்திகேயன், கமல் அவர்களை மேடையில் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
கமல் சார் அவருடைய படத்தை பாராட்டியதும், அவருடைய விமர்சனங்கள் மூலமாக கற்றுக்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்தார்.ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் உண்மையாகவே “அபூர்வ சகோதரர்கள்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார். இருவருக்கிடையேயான நட்பு, திரைப்பட உலகில் ஒரு பெரும் உத்வேகமாக இருப்பதாகவும் கூறினார். அஜித் குமாருடன் சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்தார்.நிகழ்ச்சி முடிவில், தொகுப்பாளர் “தளபதி கொடுத்ததில் புடிச்சது வாட்ச்சா இல்ல துப்பாக்கியா ” என்ற கேள்விக்கு, பதிலளித்த சிவகார்த்திகேயன், “தளபதி விஜய் கொடுத்த அன்புதான் எனக்கு பிடித்தது!” என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டார்.