என் மகன் எப்படி இருந்தான் தெரியுமா?

ஜெயம் ரவி பற்றி அவரது தந்தை எடிட்டர் மோகன் பேசும் வீடியோ வைரல்.

சமீபத்தில் தனது காதல் மனைவியை பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி, விவகாரத்து கேட்டு சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள தனது மனைவி ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டுத் தருமாறு, போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனக்கு சொந்தமாக வங்கி கணக்கு கூட இல்லை. நான் செலவழிக்கிற பணத்துக்கு ஆர்த்தியிடம் கணக்கு சொல்ல வேண்டும். ஆனால் ஆர்த்தி என்ன வேண்டுமானாலும் செலவு செய்தார். இன்ஸ்டாகிராம் கணக்கு லாக் இன் எனது வசம் இல்லை என்று பல வருத்தங்களை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே பாடகி கெனிஷா எனது நண்பர் மட்டுமே என்றும் கூறியிருந்தார்.

இப்போது நடிகர் ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக அவரது நடிப்பில் பிரதர் என்ற படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. மேலும் உதயநிதி மனைவி கிருத்திகா டைரக்ட் செய்த காதலிக்க நேரமில்லை என்ற படம் ரிலீஸாக உள்ளது. இதில் நித்யாமேனன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஜெயம் ரவி குறித்து அவரது தந்தை எடிட்டர் மோகன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில்தான் ஜெயம் ரவி பிறந்தான். அவன் பிறந்த அடுத்த நாளே என்னுடைய உடலில் மாற்றம் தெரிந்தது. சீக்கிரமாக உடல் குணமடைந்தேன். பள்ளியில் அவன் ஹீரோ போல இருந்தான். எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் ஜெயம் ரவி அதில் இல்லாமல் இருக்க மாட்டான்.

ஜெயம் ரவி பரதநாட்டியம் 12 வயதில்அரங்கேற்றம் நடத்தினேன். அதன்பின் பரதநாட்டியம் கிளாசை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு தொடங்கினால் நடை மாறிவிடும் என்பதால் அத்துடன் நிறுத்திவிட்டேன். மும்பையில் ஒரு கல்லூரியில் நடித்து முடித்த ஜெயம் ரவி, எல்லாம் மொழி படங்களிலும் நடிக்கும் நடிகராக இருக்கிறார். என்னுடைய மகன் ஜெயம் ரவி வளர்ந்தபோது ராஜா மாதிரி இருந்தான் என்று எடிட்டர் மோகன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.