தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் 44வது படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த கேங்ஸ்டர் திரைப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது, இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கம் படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதற்கிடையில், சூர்யாவின் வரலாற்று பின்னணி படமான ‘கங்குவா’வின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. சூர்யாவின் படங்கள் குறைந்த கால இடைவெளியில் வெளியாக உள்ளது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.