மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குகிறார் சுந்தர் C

நடிகை நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த 2020ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் படத்தை அவர் மிக சிறப்பாக இயக்கியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகி உள்ளது. நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ள இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவில்லை. மாறாக சுந்தர் சி இயக்கவுள்ளார். இந்த மாற்றம் படத்திற்கு எந்த வகையில் சிறப்பாக அமையும் என்பது குறித்து ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

இந்த படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திந்தார் ஆர்ஜே பாலாஜி. மூக்குத்தி அம்மனை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இருந்தபோதிலும் படத்தில் தனுக்கேயுரிய ஸ்டைலில் பல அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பேசியிருந்தார் ஆர்ஜே பாலாஜி.

இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த 2வது பாகத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் வேல்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தை சுந்தர் சி இயக்க உள்ளது குறித்தும் உறுதிப்படுத்தியுள்ளது. லீட் கேரக்டரில் முதல் பாகத்தில் அம்மனாக நடித்திருந்த நயன்தாராவே நடிக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பில் சுந்தர் சி மற்றும் அம்மனின் சூலத்தை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ளது. இதில் நயன்தாராவின் லுக் இல்லாத நிலையில் அவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

முன்னதாக வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவை சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தார் ஆர்ஜே பாலாஜி. மூக்குத்தி அம்மனாக அவர் சொல்லும் பல கருத்துக்கள் சமூகத்திற்கு தேவையானதாக அமைந்திருந்தது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.