கார்த்தி 29 படத்தை இயக்குகிறார்: டானாக்காரன் பட இயக்குனர் தமிழ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது மெய்யழகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்து சர்தார் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் எச்.வினோத்க்கு 2-வது வாய்ப்பாக தீரன் படத்தில் நடித்த கார்த்தி, மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு அவரது 2-வது படமான கைதி படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் நிலையில், எச்.வினோத் தற்போது தளபதி 69 படத்தையும், லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தையும் இயக்கி வருகின்றனர். அதேபோல் குட்டிப்புலி இயக்குனர் முத்தையாவுக்கு கொம்பன், வென்னிலா கபடிக்குழு இயக்குனர் சுசீந்திரனுடன் நான் மகான் அல்ல, அட்டக்கத்தி பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ், ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான், ஆகிய படங்களை இயக்குனர்களுக்கு 2-வது படமாக கொடுத்துள்ளார் கார்த்தி.

அந்த வகையில் 96 படத்தின் மூலம் அறிமுகமான பிரேம்குமார் இயக்கத்தில் அவரது 2-வது படமாக மெய்யழகன் என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி தற்போது 8-வது முறையாக டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தமிழ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அவரது 2-வது படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க உள்ளார். தற்காலிகமாக கார்த்தி 29 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

சகுனி (2012), காஷ்மோரா (2016), தீரன் அதிகாரம் ஒன்று (2017), கைதி (2019), சுல்தான் (2021), மற்றும் ஜப்பான் (2023) ஆகியவற்றுக்குப் பிறகு 7-வது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது. படத்தின் கான்செப்ட் போஸ்டருடன் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர், இதில் ஒரு கப்பல் புயல் நீரில் பயணிக்கிறது. இந்த படம் ஒரு பீரியட் காலக்கட்ட பின்னணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜெய் பீம் மற்றும் அசுரன் போன்ற படங்களில் அட்டகாசமான நடிப்பிற்காக அறியப்பட்ட தமிழ், வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மிகவும் முக்கியமான படங்கில் ஒன்றாகக் கருதப்படும் கார்த்தி 29, பி.ஃபார்யூ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் பேனர்களின் கீழ் இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்ரமணியன் ஆகியோரால் இணைந்து தயாரிக்கப்படும். கார்த்தி 29 படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நடிகர் பி.எஸ்.மித்ரனின் சர்தார் 2 படத்திற்கான தனது பகுதிகளை முடித்த பிறகு இது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு படங்களையும் தவிர, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் கைதி 2 படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துடன் ஜூனியர் என்டிஆரின் தேவார பகுதி-1 மற்றும் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் உட்பட ஒரு சில படங்களும் வெளியாக உள்ளது.

https://x.com/DreamWarriorpic/status/1835279920513089610?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1835279920513089610%7Ctwgr%5E3a6489906da548a7974301a0bc494622490ee2e4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F