நிஜமாகவே யோகி பாபுவை அஜித் கழட்டிவிட்டாரா?

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் லெவல் நடிகராக இருந்து வருகிறார். அவரது படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களுக்கும், டைரக்ட் செய்ய இயக்குனர்களுக்கும், அவருடன் நடிக்க நடிகர், நடிகைகளுக்குள் தமிழ் சினிமாவில் கடும் போட்டியே நடக்கிறது.

ஏனெனில் அஜீத்குமார் வேற லெவலில் வசூல் தந்து வருகிறார்.

கடந்த 22 ஆண்டுகளாக, நடிகர் அஜீத்குமாருடன் வடிவேல் இணைந்து நடிப்பதில்லை. அதற்கு காரணம் ராஜா என்ற படத்தில் அஜீத்குமாருடன் வடிவேலு காமெடி ரோலில் நடித்தார். அப்போது அஜீத்குமாரை வாடா, போடா என மரியாதை குறைவாக வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசியிருக்கிறார். இதுகுறித்து அஜீத்குமார் எச்சரித்தும், வடிவேலு அதே போல் அடாவடியாக நடந்து கொண்டார்.

இதையடுத்து இனிமேல் வடிவேலு எனது படங்களில் நடிக்க கூடாது என இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அஜீத்குமார் ஸ்ட்ரிக் ஆர்டர் போட்டதால்தான், இன்றுவரை வடிவேலு, அஜீத் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து வருகிறார். இனிமேலும் அஜீத்குமாருடன் வடிவேலு நடிக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.

அதே போன்ற ஒரு அலப்பரையில் ஈடுபட்டதால்தான் நடிகர் யோகிபாபு, அஜீத்குமார் படத்தில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வலிமை. இந்த படம் 2022ம் ஆண்டில் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் யோகிபாபு காமெடி ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, அஜீத்குமாருடன் சில காட்சிகளில் நடித்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் யோகிபாபு ஏகப்பட்ட பில்டப் செய்திருக்கிறார். ஷூட்டிங்குக்கு சரியான நேரத்தில் வராமல் தாமதிப்பது, மாலை 4 மணிக்கே கிளம்பி விடுவது, உதவி இயக்குனர்களை இன்சல்ட் செய்வது, திமிராக படப்பிடிப்பு தளத்தில் நடந்துக்கொள்வது என அட்ராசிட்டி செய்திருக்கிறார்.

ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் டிசிப்ளின் மிக முக்கியம். மரியாதையான செயல்பாடு முக்கியம். அதனால் ஒரு கட்டத்தில் அஜீத்குமார் மற்றும் இயக்குனர் எச் வினோத் முடிவு செய்து, வலிமை படத்தில் இருந்து யோகி பாபுவை கழட்டி விட்டுவிட்டனர். அந்த கடுப்பில், கோபத்தில்தான் டோண்ட் டச் மீது என, அஜீத்குமார் தன்னை சொன்னதாக அபாண்ட பழி சுமத்தியிருக்கிறார் யோகிபாபு என, சமீபத்தில் ஒரு வீடியோவில் மூத்த சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.