விஜய் நடிக்கும் கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை நான்காவது பாடல் வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலரும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்திற்கான டிக்கெட் விலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை ரோகினி திரை அரங்கில் ஒரு டிக்கெட் 390 ரூபாய்க்கு விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.