தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகர் ரியாஸ்கான். இவரது மனைவி உமாரியாசும் சினிமாவில் புகழ்பெற்ற நடிகை தான்.
இந்நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வருவதால், மலையாள சினிமா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த வகையில் மலையாள நடிகை ஒருவர் ரியாஸ் கான் தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாக புகார் கூறியுள்ளார்.
ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். அதில், தான் பிளஸ் டூ முடித்த நேரத்தில் தன்னை அணுகிய நடிகர் சித்திக், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அப்போது பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இந்த புகார்களைத் தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகியுள்ளார். சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை அம்மா தலைவர் மோகன்லாலுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து , நடிகர் ரியாஸ் கான் மீதும் நடிகை ரேவதி சம்பத் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஒரு புகைப்படக் கலைஞர் என் அனுமதி இல்லால் ரியாஸ் கானிடம் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து எனக்கு இரவு ரியாஸ் கானிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது ரியாஸ் கான் பாலியல் உறவில் ஆர்வம் உள்ளதா என்று கேட்டதாகவும், வெளிப்படையான கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி தகாத உறவிற்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அதோடு தனது தோழிகளையும் ஏற்பாடு செய்து தருமாறு ரியாஸ்கான் கேட்டதாக ரேவதி புகார் கொடுத்திருக்கிறார். இந்தச் செய்தி இப்போது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து அங்கு பெரிய நடிகர்களின் பெயர் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகிறது.
நடிகைகள் நேரடியாகவே ஊடகங்களில் தங்களுக்கு நடந்த பிரச்சனையை துணிச்சலாக கூறி வருகிறார்கள். மேலும் இப்போது ரியாஸ் கானை சினிமாவில் இருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும் என பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.