ரகு தாத்தா திரை விமர்சனம்

எம் எஸ் பாஸ்கர், கீர்த்தி சுரேஷ், ரவீந்திரா விஜய், ஆதிரா பாண்டி லட்சுமி இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.

இது 70 காலகட்டங்களில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ்க்கும், எம் எஸ் பாஸ்கருக்கும் தாத்தா பேத்தி உறவு வலுவாக உள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசுபவர், ஹிந்தி மொழி திணிப்பை எதிர்ப்பவர் , எழுத்தாளர் என பன்முகத்தன்மைகளில் சிறந்து விளங்குகிறார் பேசுகிறார்.

இந்நிலையில் எம் எஸ் பாஸ்கருக்கு புற்றுநோய் என்று ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகிய நிலையில், அவரின் மூன்று கடைசி ஆசைகளில் மூன்றாவது முக்கிய ஆசையாக கீர்த்தி சுரேஷ் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

இதனால் தலையில் இடி விழுந்தது போல் ஆகும் கீர்த்தி சுரேஷ், யாரை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் இறுதியாக தன்னுடைய நண்பராக பழகும் ரவீந்திரா விஜய்யை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

ஆனால் அதன் பிறகு தான் தெரிய வருகிறது ரவீந்தரா விஜய்யின் உண்மையான முகம் என்னவென்று தெரியவருகிறது. மொழிப்பற்று உள்ள கீர்த்தி சுரேஷுக்கு இன்னொரு நெருக்கடியாக, ஹிந்தி கத்துக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

இவை இரண்டிலிருந்தும் எப்படி புறக்கணித்தார், அவருக்கும் ரவீந்திர விஜய்க்கும் திருமணம் நடந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.

கீர்த்தி சுரேஷ் எம் எஸ் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பை விட, ரவீந்திரா விஜய்யின் நடிப்பு ஒரு பங்கு மேலே தெரிகிறது, அவருடைய உருவ தோற்றம் ஒரு பக்கம் பார்க்கும் போது நடிகர் மணிகண்டனை ஞாபகப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் பார்க்கும் போது சமுத்திரகனியை ஞாபகப்படுத்துகிறது. நகைச்சுவை கதாபாத்திரத்திலும் சரி, வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் சரி நம்மை சிரிக்கவும் வைக்கிறார் மிரட்டவும் வைக்கிறார்.

படத்தில் ஷான் ரோல்டரின் இசை அற்புதம். பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் பாடங்களை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று யோசிக்க தோன்றும் ஒரு விதமான ரகம்.

இது ஒரு பீரியட் பிலிம் என்பதால், அதற்குத் தகுதியான தேவையான ஆர்ட் ஒர்க்கை சிறப்பாக செய்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர்.

படத்தின் பிரச்சினையாக பார்க்கப்படுவது திரைக்கதை தான், இந்தப் படம் இந்தி திணிப்பை பற்றி பேசுகிறதா..?பெண்ணியத்தைப் பற்றி பேசுகிறதா.? ஒரு பெண்ணின் திருமணத்தின் அவல நிலைமையை பற்றி பேசுகிறதா.? என்று எந்த ஒரு தெளிவும் இல்லாமல், இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதா..? அல்லது ஒரு கதையாக எடுத்துக் கொள்வதா..? என்ற குழப்பத்திலேயே படம் பார்க்க வைத்து விடுகிறார் இயக்குனர்.

ஹிந்தி திணிப்புக்கு முற்படுபவர்கள் இந்த சாதிக்காரர்கள் தான் என்று காட்டுவது அபத்தத்திலும் அபத்தம்.

சொல்ல வந்த கதையை மேம்போக்காக சொன்ன காரணத்தினால் ரகு தாத்தா பெரிதாக ஜொலிக்காமல் போய்விட்டார்.