அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அர்ஜுனின் தோற்றம் வெளியீடு

அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிவரும் படம், ‘விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ஆரவ், ரெஜினா உட்பட பலர் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னைத் திரும்பியுள்ள படக்குழு கிளைமாக்ஸ் காட்சியை ஹைதராபாத்தில் எடுக்கின்றனர். இந்தப் படத்தில் இருந்து இதுவரை 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 4-வது போஸ்டராக அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ள அர்ஜுனின் தோற்றத்தை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.