ரஜினிக்கு வில்லனாக நடிக்க நாகர்ஜுனா மறுப்பு..?

ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ஷோபனா, சவுபின் சாகிர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோ நாகர்ஜுனா ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் வில்லனாக நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டார் என்கிறார்கள். இதனால் வில்லனாக நடிக்க வேறு இந்தி மற்றும் தென்னிந்திய ஹீரோக்கள் சிலரிடம் படக்குழு பேசி வருகிறது. மேலும் மோகன்லால் வில்லனாக நடிக்கலாம் என்றும் பட குழு பேசி வருகிறது.