விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் வெளியானது. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் நாளை புதன்கிழமை அன்று தங்கலான் படத்தின் ‘மினிக்கி மினிக்கி’ என்ற பாடல் வெளியாக உள்ளது. தற்போது இந்த பாடலின் 32 வினாடி புரோமோ வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பா. ரஞ்சித், முழு பாடல் வீடியோ நாளை வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.