கல்கி 2898AD திரைவிமர்சனம்

மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் மகனான அஸ்வத்தாமன் துரியோதனன் சார்பாக கிருஷ்ணரை எதிர்த்து போரிடுவார். அந்தப் போரில் தோல்வி அடைந்ததால், கிருஷ்ண பரமாத்மா கலியுகத்தில் நான் பிறப்பேன், என்னை காக்கும் பாதுகாவலனாக நீ இருந்தால் கதி மோட்சம் அடைவாய் என்று கூறிவிட்டுச் செல்கிறார்.

அதன் பிறகு கதை காசியில் கிபி 2898ல் தொடங்குகிறது. அங்கு காம்ப்ளக்ஸ் என்று சொல்லக்கூடிய, நகரத்திற்குள் போக வேண்டும் எனில் குறைந்தது பத்தாயிரம் யூனிட்டுகள் வேண்டும். அதற்காக பிரபாஸ் இல்லாத பொல்லாத வேலைகள் எல்லாத்தையும் செய்கிறார். அவருக்கு உதவியாக புஜ்ஜி என்ற காரும் கூடவே இருக்கிறது.

இன்னொரு பக்கம் கர்ப்பிணியான பெண்கள் அனைவரையும் காம்ப்ளக்ஸ் வளாகத்திற்குள் வளர்த்து வருகிறார்கள். எந்த ஒரு குழந்தையையும் பிறக்க விடாமல் தடுக்கிறார்கள். அவர்களைப் பரிசோதனை செய்து ஒரு விதமான திரவத்தை எடுத்து வில்லனாகிய கமல்ஹாசனுக்கு கொடுக்கிறார்கள். இதிலிருந்து தீபிகா படுகோனே தப்பிக்கிறார். அவரைக் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு வெகுமதிகள் தாராளம் என்று அறிக்கை வெளியிடப்படுவதால், பிரபாஸ்,தீபிகா படுகோனை தேடி செல்கிறார். அத்தனை நாட்கள் அமைதியாக இருந்த அமிதாப்பச்சன் மீண்டும் தீபிகா படுகோனேவைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இறுதியில் தீபிகா படுகோனே காப்பாற்றப்பட்டாரா..? பிரபாஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்திற்குள் நுழைந்தாரா..? கமல்ஹாசன் எதற்காக கர்ப்பிணி பெண்கள் அனைவரையும் கொன்று அந்த திரவத்தை எடுத்துக் கொள்கிறார்..? என்பதே படத்தின் கதை.

இதிகாசத்தை வித்தியாசமாக கொடுக்கிறேன் என்ற பெயரில், பெரும் அபத்தமாக கொடுத்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக பிரபாஸுக்கு வரும் அறிமுக காட்சிகள் கிரிஞ்சின் உச்சம். அந்த 20 நிமிட அறிமுக கட்சி தேவையா..?

தீபிகா படுகோனே படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அழுமூஞ்சியாகவே இருக்கிறார்.

கம்பீரமான கமல்ஹாசனை பார்த்த
நமக்கு நோஞ்சான் கமல்ஹாசனை பார்க்கும்போது முகம் சுளிக்க வைக்கிறது.

படத்தில் உருப்படியாக அமிதாப்பச்சன் இன் ரோல் மட்டுமே வருகிறது.

படத்தில் மேலும் நிறைய கதாபாத்திரங்கள் வருகிறார்கள் யாரும் மனதில் ஒட்டவே இல்லை.

படத்தின் கதையை யோசித்த இயக்குனர் நாக் அஸ்வின், திரை கதையையும் சற்று விறுவிறுப்பாக்குவது எப்படி என்று யோசித்து இருந்திருக்கலாம்.

அதேபோல் இந்த படம் வெறும் இந்துக்களுக்காகவே எடுத்து இருக்கிறார்கள் என்று அப்பட்டமாகவே தெரிகிறது. கடவுள் மீண்டும் மனிதனாக வருவார் என்று மற்ற மதங்களில் எங்கும் சொல்லவில்லை என்பதை அவர் படிக்கவில்லை போலும்..!

சாதி மத உணர்வுகள் இன்றி திரையரங்குக்குள் வரும் மக்கள் பார்க்க வேண்டியவது படம் மட்டுமே. உங்களின் மத திணிப்புகளை அல்ல.

படத்தின் வி எஃப் எக்ஸ் காட்சிக்காக மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வி எப் எக்ஸ் காட்சிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மிகவும் பெயர் பெற்ற 10 படங்களை தழுவியே அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பது வேதனையான விஷயம்.

படத்தில் பாடல்கள் எங்குமே ஒட்டவே இல்லை. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு தகுதியான இசையமைப்பாளரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது..?

பாகுபலிக்கு பிறகு நடிகர் பிரபாஸுக்கு எந்த ஒரு மிகப்பெரிய பிரம்மாண்ட படமும் ஓடவே இல்லை என்பது உலகம் அறிந்த வரலாறு. இவரை நம்பி நாக் அஸ்வின் குடும்பத்தினர் எப்படி 600 கோடி முதலீடு செய்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

இதில் இரண்டாம் பாகம் வேறு வருகிறது. ஒருவேளை இரண்டாம் பாகத்தில் அனைத்து கதையும் வைத்திருந்தால், முதல் பாகத்தில் எதுவுமே ஓடாமல் போனதனால், இரண்டாம் ஆம் பாகமும் ஓடாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஆக மொத்தத்தில் கல்கி படம் 600 கோடி ரூபாய் அபத்தத்தின் உச்சம்.