பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
பான் இந்தியா படமாக ரிலீஸான கல்கிக்கு நாடு முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் பாகுபலி படத்தைவிடவும் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். இந்தச் சூழலில் கல்கி படத்துக்காக கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கல்கி 2898AD படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்போடு நேற்று திரையரங்குகளில் வெளியானது. பிரமாண்ட பட்ஜெட், பான் இந்தியா ஸ்டார்களின் ஐக்கியம் என எக்கச்சக்க ஹைப்போடு வெளியான படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு தியேட்டருக்கு சென்றனர். ஆந்திரா, தெலங்கானாவின் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஒரு பண்டிகை நாளை போல் நேற்றைய நாளை கொண்டாடினார்கள் ரெபல் ஸ்டார் பிரபாஸின் ரசிகர்கள். அதுதொடர்பான வீடியோக்களும் ட்ரெண்டாகின.
பாசிட்டிவ் விமர்சனம்: புராண கால கதையை தற்காலத்துக்கு ஏற்றவாறு கொடுத்திருந்தார் நாக் அஸ்வின். படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். மேலும் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், பிரபாஸின் நடிப்பு, இயக்குநரின் மேக்கிங் என அத்தனையும் மிகச்சிறப்பாக இருப்பதாகவும்; இது கண்டிப்பாக பிரபாஸுக்கு மெகா ஹிட் படம்தான் என்றும் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி பொங்க போஸ்ட்டுகளை போட்டுவருகின்றனர். அதேபோல் கமல், அமிதாப் உள்ளிட்டோரின் நடிப்பும் அதகளமாக இருந்தது என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.
சம்பளம்: இவர்கள் தவிர்த்து துல்கர் சல்மான், ராஜமௌலி, ராம் கோபால் வர்மா, மிருணால் தாக்கூர் உள்ளிட்டோரும் கேமியோ ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் கல்கி படத்துக்காக கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கமலுக்கு 20 கோடி ரூபாய், தீபிகா படுகோனேவுக்கு 20 கோடி ரூபாய், அமிதாப் பச்சனுக்கு 17 கோடி ரூபாய், திஷா பதானிக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.