இந்த மாதம் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது ‘பொன்னியின் செல்வன் 2’(PS 2) திரைப்படம். சில மாதங்கள் முன்பு வெளியான ‘பொன்னியின் செல்வன் 1 ’(PS 1) பிரமாண்ட வெற்றியடைந்து பெரிய வசூலை ஈட்டி தந்தது என்பது குறிப்பிடத்தக்காது.
‘பொன்னியின் செல்வன் 1 படத்தின் வெற்றி, ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் எதிர்பார்பை அதிகரித்துள்ளது. இப்படிபட்ட சூழலில் இப்படத்தை தமிழகமெங்கும் நடிகரும், தமிழ் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சருமான உதயாநிதி ஸ்டாலின் நிறுவிய ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. உதயாநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திலலிருந்து அவர் வெளியேறிவிட்டார். தற்போது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தை அர்ஜூன் துறை மற்றும் செண்பகமூர்த்தி நிர்வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்காது.
விஷயம் என்னனா, இந்த ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை தமிழகம் எங்கும் வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தற்போது திரையரங்குகளிடம் ஆரம்பித்திருக்கும் டெபாசிட் வசூல் பற்றியது தான். தற்போது தமிழக திரையரங்குகளிடமிருந்து மொத்தமாக குறைந்தது ரூ.200 கோடியை ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கான வைப்புத்தொகையாக வசூலிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த வைப்புத்தொகை ஆட்டத்துக்கு முல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் கைகொடுப்பதில்லை, ஆனால் அவர்களுக்கு எந்த படமும் தேடி வரும் என்பது நிதர்சனம். தனி திரையரங்குகள் மட்டுமே இந்த விளையாட்டுக்கு பலி ஆடு என்பது உண்மை தான். இந்த வைப்புத்தொகை என்பது ஒவ்வொரு திரையரங்குக்கும் வேறுபடும். சில திரையரங்குகளிடம் ரூ.10 லட்சம் என வைப்புத்தொகையும் சில திரையரங்குகளிடம் ரூ. 30 லட்சம் என வைப்புத்தொகையும் வசூலிக்கபடுவதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரைத்துறையில் கருப்பு பணம் புரளுகிறது என்று அவ்வபோது செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் இந்த வைப்புத்தொகை என்பது பெரிய தொகை என்பதினால், திரையரங்கு உரிமையாளர்கள் அந்த பணத்தை பைனான்சியர்களிடமிருந்து தான் சுமார் 3% வட்டிக்கு கடன் வாங்கி கட்டுவது வழக்கம். அந்த பணத்தையும் அவர்கள் வெள்ளை பணமாக தான் கொடுப்பார்கள். திரையரங்கு உரிமையாளர்கள் காட்டும் இந்த வைப்புத்தொகை படம் ஓடி முடிந்த பிறகு, கணக்கு பார்த்து மீதி பணத்தை திரையரங்கு உரிமையாளர்களிடம் கொடுப்பது தான் வழக்கம். ஆனால் இந்த படம் பெரிய பட்ஜெட் படம், அதை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமோ ஒரு பெரிய நிறுவனம். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தொடர்ந்து படங்கள் வெளியீட்டு வருவதால், அவர்கள் பெரும்பலாம் அந்த மீதி பணத்தை அடுத்து வரும் படத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என தெரிவிப்பார்கள். திரையரங்கு உரிமையாளர்களும் வேறு வழியின்றி ஒத்துகொள்வார்கள்.
மேலே குறிப்பிட்டது ஒரு புறமிருக்க, திருச்சியில் இருக்கும் GT என்னும் ஜி. தியாகராஜன் என்பவர் ஒரு பிரபல திரைப்பட விநியோகஸ்தர். அவர் தான் தற்போது திருச்சி திரைப்பட மாவட்டத்திற்கான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளார். அவர் போட்டுள்ள டர்ம்ஸ் மற்றும் வைப்புத்தொகையோ மிரள வைக்கிறது. GT அவர்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் 80% பங்கு என டர்ம்ஸ் கேட்கிறார்கள். அதுமட்டுமின்றி GT அவர்களோ ரூ. 30 லட்சம், ரூ .40 லட்சம் என்று ரூ.60 லட்சம் வரை ஒரு திரையரங்குக்கு வைப்புத்தொகையாக கேட்கிறார்களாம். உதராணாதிற்கு சொல்ல வேண்டும்மென்றால், ஒருவர் புதுக்கோட்டை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, சீர்காழி மற்றும் கீரனூர் ஆகிய ஐந்து ஊர்களிலும் திரையரங்கு நடத்தி வருகிறார். அவரிடம் மொத்தமாக ரூ.1.25 கோடி வைப்புத்தொகையாகவும், 80% பங்கு என டர்ம்ஸ் கேட்கிறாராம் GT. அதே போல், திருச்சி நகரின் மைய பகுதியில் அவர் திரையரங்கம் சமீபத்தில் தான் புதுபிக்கப்பட்டது. அந்த திரையரங்க உரிமையாளரிடம் 80% பங்கு என டர்ம்ஸ் கேட்கப்படுவதாக தாவல்கள் வருகிறது. கும்பகோணத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ மூன்று அல்லது நான்கு திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஒரு திரையரங்குக்கு ரூ.60 லட்சம் வைப்புத்தொகையும், 80% பங்கு என டர்ம்ஸ் கேட்கப்படுவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய திரைப்படங்களுக்கு வைப்புத்தொகை கேட்பது வழக்கம் தான். அதுவும் 60% பங்கு என டர்ம்ஸ் தான் விநியோகஸ்தர்கள் கேட்பார்கள். ஆனால் இந்த 80% பங்கு என டர்ம்ஸ் கேட்பது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதாக நம்மிடம் சில திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தற்போதுள்ள திரைத்துறையின் சிரமமான சூழ்நிலையை புரிந்துகொண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் குறைந்த வைப்புத்தொகை மற்றும் எப்போதும் போல் 60% பங்கு என டர்ம்ஸ் கேட்டால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்மிடம் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.