சமீபத்தில் உதயநிதியின் மகன் இன்பநிதி அவரின் பெண் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுபற்றி முதல்முறையாக உதயநிதி பேசியுள்ளார்.
உதயநிதி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் “கண்ணை நம்பாதே” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வரும் உதயநிதி இதுபற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அரசியல் மற்றும் சினிமா துறை குடும்பத்தை சார்ந்துள்ள பசங்களுக்கு இது போன்ற சர்ச்சை எழுவது இயல்பு தான். மேலும், என் மகனுக்கு 18 வயது ஆகின்றது. இது அவரின் தனிப்பட்ட விஷயம். என் மகன் மற்றும் என் குடும்பத்தார் சம்மந்தப்பட்ட விஷயம்.
எனவே இதைப்பற்றி வெளியே பேச நான் விரும்பவில்லை. மேலும் என் மகனின் தனிப்பட்ட விஷயத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் கூட தலையிட முடியாது என பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி. இவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது